“மொட்டிலிருந்து துளிர்விடும் நாடு – 500 தேயிலை கிராமங்கள்” தேசிய வேலைத்திட்டம்
சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களின் பொருளாதார நலனை வலுப்படுத்தும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் “மொட்டிலிருந்து துளிர்விடும் நாடு – 500 தேயிலை கிராமங்கள்” தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, யட்டியந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சீபோத் மற்றும் மஹபாகே கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தேயிலை விவசாயக் கிராமங்களாக பெயரிடப்பட்டு, அதற்கேற்ப பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
இத்திட்டத்தின் முதலாவது கட்டமாக, “சீபோத் தேயிலை விவசாயிகள் கிராமம்” அண்மையில் (16ஆம் திகதி) கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், யட்டியந்தோட்டை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கௌரவ கலாநிதி நந்தன மில்லகல அவர்களின் தலைமையில் நிறுவப்பட்டது.
சீபோத் விகாரையின் விகாராதிபதி தேரரின் ஆசீர்வாதத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்ச்சியில், யட்டியந்தோட்டை பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்கள், யட்டியந்தோட்டை பிரதேச செயலாளர் திருமதி டி. அனோமா திஸாநாயக்க, தேயிலை விரிவாக்க ஆராய்ச்சி உத்தியோகத்தர், சீபோத் பிரிவின் கிராம உத்தியோகத்தர், ஏனைய அரச உத்தியோகத்தர்கள், சீபோத் தேயிலைச் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் பெருமளவான பிரதேச மக்கள் கலந்து கொண்டனர்.
















