பெண்களின் சுகாதாரப் பிரச்சினைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி
யட்டியந்தோட்டை பிரதேச செயலாளர் திருமதி டி. அனோமா திஸாநாயக்க மற்றும் உதவி பிரதேச செயலாளர் திருமதி நதீஷானி கே. வீரகல ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட பெண்களின் சுகாதாரப் பிரச்சினைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்மையில் (17ஆம் திகதி) யட்டியந்தோட்டை ஸ்ரீ நந்தாராம விகாரை வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கான வளவாளராக சமூக சுகாதார மருத்துவ அதிகாரி திருமதி மஹீஷா சேனாரத்ன அவர்கள் பங்களிப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சி பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் ஆயுர்வேத அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரால் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது.
















